18 வயதில் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்

சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் 2020ஆம் ஆண்டுக்கான தனது 35- ஆவது ஆண்டு கோடிஸ்வரர் பட்டியலில் வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த 2,775 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தாண்டு மட்டும் 660 பேர் புதியதாக இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொரோனா காலமாக இருந்தாலும் கடந்த 2020- ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 8 ட்ரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் உள்ள அனைத்து பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பும் 13.1 ட்ரில்லியன் டாலர்.

இந்த நாளிதழில் உலகில் மிக இளம் வயதில் பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் கெவின் டேவிட் லெஹ்மன் இடம்பெற்று அனைவரையும் மிரள செய்துள்ளார்.

கெவினின் தற்போதைய சொத்து மதிப்பு 330 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறுவயதில் 330 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக காரணம் அவருடைய தந்தை குந்தர் லெஹ்மன்.

கெவினின் தந்தை குந்தர் லெஹ்மன், ஜெர்மனியின் மிகப்பெரிய மருந்துக்கடையான ‘Dm-drogerie market’ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தன் சொத்து மதிப்பில் குறிப்பிட்ட பங்கை தன் மகனுக்கு எழுதி வைத்து, அவர் மகனை உலக பணக்காரர் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு செய்துள்ளார்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சிலர் சொத்தில் குறிப்பிட்ட பங்கை எழுதி வைத்ததற்கே அவரின் மகன் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்றால் தந்தையின் சொத்து மதிப்பு குறித்து வாயடைத்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here