2- ஆம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை :இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

 –விருது பெற்று சாதனை!

பொள்ளாச்சி எஸ்.வி நாயுடு வீதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன்- மீனாட்சி இவர்களின் மகள் வர்ணா 7 வயது சிறுமி, 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதல் வேகமாக எழுதக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை கண்ட பெற்றோர்கள் சிறுமி வர்ணாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்தனர்.

மாணவி நன்றி என்கிற வார்த்தையை 9 மொழிகளில் கூறுவதும், 5 மொழிகளில் மெல்லிய குரலில் பாடல்களைப் பாடும் திறமையும், மற்றும் 100- இல் இருந்து 1 வரை எண்களை தலைகீழாக ஒரு நிமிடத்தில் எழுதும் திறன்கொண்ட இந்த மாணவி வர்ணாவின் வீடியோவை பெற்றோர்கள் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் சிறுமி வர்ணாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாணவி வர்ணாவிற்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் தாயார் மீனாட்சி கூறியதாவது என்னுடைய மகள் வர்ணா வாஞ்சிநாதன் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல பதிவாகியுள்ளது.

ஒன்பது மொழிகளில் நன்றி சொல்லியுள்ளாள் இச்சிறுமி , ஐந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாள் 12 திருக்குறளுக்கு மேல் கூறியும். ஓன்று முதல் நூறு வரை இறங்குவரிசையில் எழுதியுள்ளார்.

இரு பரிணாம படங்கள், முப்பரிமாண படங்களை 42 வினாடிகளில் முடித்துள்ளார். இதெல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்துள்ளது.

இன்னும் குறைந்த கால நேரத்தில் சிறுமிக்கு நாங்கள் பயிற்சிகள் கொடுத்து வருகிறேன். அதேபோல் கலையில் பரத நாட்டியமும் பயின்று வருகிறாள்.

இதில் நிறைய முத்திரைகள் உள்ளது. அதில் ஐம்பது விநாடிக்குள் அனைத்து முத்திரைகளையும் சொல்ல வேண்டும் என்றும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

என்னுடைய மகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாள் என்று நம்புகிறேன் என தாயார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here