நிக்கி லியோவை கண்டுபிடிக்க இண்டர்போலின் உதவி

கோலாலம்பூர்: நாட்டில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சூத்திரதாரி என்ற சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் டத்தோ ஶ்ரீ நிக்கி லியோவை கண்டுபிடித்து கைது செய்ய அரச மலேசியா காவல்துறை (பி.டி.ஆர்.எம்) ப்ளூ நோட்டீஸ் வழியாக இண்டர்போலின் உதவியைக் கோரியுள்ளது.

தேடப்படும் ஒரு நபரைக் கண்டுபிடிப்பது, அடையாளம் காண்பது அல்லது அவரின் விவரத்தை சேகரிப்பது போன்ற கோரிக்கையை நீல அறிவிப்பு குறிக்கிறது.

போலீஸ் படையின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ  அக்ரில் சானி அப்துல்லா சானி   அனைத்துலக நிறுவனத்திடமிருந்து தாங்கள் இதுவரை எந்தக் கருத்தையும் பெறவில்லை என்றார்.

மறைந்த சார்ஜன் பஹாருதீன் ராம்லியின் அடுத்த உறவினர்களுக்கும், சார்ஜன் நோரிஹான் தாரி மற்றும் பி.டி.ஆர்.எம் ஓய்வு பெற்றவர்களுக்கும் நேற்று புக்கிட் அமான் மசூதியில் நன்கொடைகளை வழங்கிய பின்னர் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு மலேசிய-தாய் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொது நடவடிக்கை படையின் சார்ஜன் பஹாருதீன் மற்றும் சார்ஜன் நோரிஹான் ஆகியோர் ஈடுபட்டனர். பிந்தையவர் உயிர் தப்பினார்.

முன்னதாக, கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மத கவுன்சில் 1,051 போலீஸ் ஓய்வு பெற்றவர்களுக்கு மொத்தம் RM535,500 வழங்கியது. – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here