வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்

  –மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த 1 மாதமாக பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று டெல்லியில் கூடி ஆலோசித்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3- ஆவது தடுப்பூசி என்ற நிலையை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பெற்றுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா நோய் பரலைக் விரைவாக கட்டுப்படுத்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சுகாதார மையத்தால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படித்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டு தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கமெண்ட் : தடுப்பூசிங்கிற பேர்ல கண்டதெல்லாம் போடாம பாத்துக்க வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறையோட பொறுப்பு. இதிலே போலி வந்துடக்கூடாது. அதிலே அது ,   அதாங்க ..  அது கலந்திடவே  கூடாது? அதுன்னா? – அதாங்க …  ஊ….ல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here