-கமலா ஹாரிஸை மிரட்டிய நர்ஸ் !
அமெரிக்கர்க வெள்ளையர்கள் சிலருக்கு கறுப்பர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க போலீஸ்காரர்களின் வன்மம் வெளிப்படையாகிவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்க துணை அதிபர் கமலாஹாரிஸ் மீதான வன்மம் சான்றாக அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்ட இவர் புளோரிடாவிலிருந்து கைது செய்யப்பட்டார்.
சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக வீடியோக்களை அனுப்பியிருந்தார்.
இந்த செயலி கைதிகளுடன் குடும்பங்களை இணைக்க உதவுகிறது. சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் “நான் உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன், நீ இறக்கப் போகிறாய்” என கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.
இந்த வழக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தொடர்புடையது என்பதால் இந்த வழக்கை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.