கலையின் புதல்வன் கலந்தனன் இறையுள்

மலையின் புகழொடு மறைந்தனன் நீயே! 
மரங்களை நட்டு மனங்களில் ராஜபாட்டை அமைத்துக்கொண்ட  கலைஞன் விவேக் மண்ணில் மண்ணில் ஐக்கியமாகியிருக்கிறான். அவன் நட்ட மரங்களின் கண்ணீரும் அவனுக்காக இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மக்கள் என பலரும்  நேரில் இரங்கல் தெரிவித்தனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளம் புடைசூழ அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. அதில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் பங்கேற்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு வந்த விவேக்கின் உடலுக்கு அவருடைய மகள் தேஸ்வினி இறுதிச்சடங்குகளைச் செய்தார். அதை தொடர்ந்து உறவினர்களும் குடும்ப வழக்கப்படி விவேக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்திலும், அவருடைய கலை சமூகச் சேவையை கவுரவிக்கும் நோக்கத்துடனும் 72 குண்டுகள் முழுங்க விவேக்கின் உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து விவேக்கின் பூத உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் , உறவினர்கள் கண்ணீர் மல்க மின்மாயனத்தை விட்டு வெளியேறினர். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இன்று விவேக் நம்மோடு இல்லை, ஆனாலும் அவரின் கலைச்சேவையை யாரும் எளிதில் மறந்துவிடமுடியுமா?

இந்தியப்பிரதமரும் இரங்கல் செய்தி கூறியிருக்கிறார் என்பதில் விவேக் ஒரு தேசிய கலைஞனாக பெயர் பதித்திருக்கிறான் என்பதில் துளியும் ஐயமில்லை. ஒப்பற்ற கலைஞன் ஓய்ந்துவிட்டானா? சாய்ந்துவிட்டானா? இன்னும் ஐயம் நீங்கவில்லை.

மக்களின் நன்மைக்காகவும் , சுற்ருச்சுழலுக்காகவும் மரங்களை நட்டவன் விவேக். இது விவேகம், சீரமை நகைச்சுவால் கட்டிப்போட்டவனல்லவா அவன் மறைந்துவிட்டானே! விவேக் தனித்தன்மை வாய்ந்த கலைஞன். அவனுக்கு இணை அவன் மட்டுமே!

மரங்களை விதைத்து மனங்களில் நிலைத்த ஜனங்களின் கலைஞன் விவேக் அள்ளித்தெளித்த அற்புத நகைச்சுவை நெடியில் கலைவாணரையும் உணரமுடிகிறது. 

கண்ணீரைத்தவிர எதைக்கொடுத்து ஈடுகட்டமுடியும். நீ கலைஞன் மட்டுமல்ல, நகைச்சுவை கவிஞன் என்பார்கள் பலர்  அதற்குமேலும் நீயோர்  ஆசுகவி.  we wake என்று பூடகமாகச் சொல்லவைத்துவிட்டாயே! இது உன்னால் மட்டுமே முடியும்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here