-கேள்வி எழுப்பினார் லிம்!
நாடாளுமன்றம் கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை தேசியக் கூட்டணி அரசீ அகற்ற வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று வலியுறுத்தினார்.
கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகாலப் பிரகடனம் கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் வெற்றி பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காகவே அவசரகாலப் பிரகடனம் கொண்டு வரப்பட்டிருப்பினும் அது அமல்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கிறது.
தொற்றுப் பரவல் 1.11 என்ற அளவில் இருந்து குறையாமல் 1.18ஆக அதிகரித்திருக்கிறது எனவும் லிம் சொன்னார்.
அவசரகாலப் பிரகடனமும் நாடாளுமன்ற இடை நீக்கமும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டிருப்பதால் நாடாளுமன்றம் உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.
அனைத்து வர்த்தகங்களும் பள்ளிக்கூடங்களும் இரவுச் ங்ந்தைகளும் (பாசார் மாலாம்) விளையாட்டு அரங்கங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளபோது நாடாளுமன்றம் மட்டும் மீண்டும் கூட முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற மலாக்கா மாநில ஜசெக சிறப்பு மாநாட்டில் அவர் இவ்வாறு பேசினார்.
2021ஆம் ஆண்டுக்கான 622 பில்லியன் வெள்ளி பட்ஜெட் என்ன ஆனது என்றும் லிம் கேள்வி எழுப்பினார்.