பாதுகாப்புக்கான மந்திரச்சொல் -மாஸ்க்

டாஸ்க் போடுமுன் மாஸ்க் போடு

மந்திரம் என்பது என்ன ? இது புதுமையான சொல் அல்ல, அதோடு அஞ்சப்படுவதாகவும் இல்லை. ஒரு சொல்லை தொடர்ந்து உச்சரிக்கும்போது அதற்கு சக்தி அதிகம் என்பார்கள். 

அடிக்கடி சொல்லும் சொல்லாகவும் இறைவனின் மந்திரச்சொல்லாகவும் இருந்தால் அச்சொல்லுக்கு பலம் அதிகம் என்பார்கள். 

ஓர் இனத்திற்கு மட்டுமே அல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் உகந்த சொல்லாக இருப்பதும் இப்போதைய மந்திரச்சொல்லாக இருப்பதும் ஒன்றுதான் – முகக்கவசம். ஆனால் பொதுவான சொல்லாக அனைவராலும்  மாஸ்க்  என்பதாகத்தான் உச்சரிக்கப்படுகிறது.

யாருமே முகக்கவசத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்று தொற்று நோய்கள் குறித்த ஆய்வின் பேராசிரியர் டாக்டர் மலினா ஒஸ்மான் பதிவு செய்திருக்கிறார்.

கோவிட் தடுப்பாகப் பயன்படுத்தப்படும் மாஸ்க் முறையாக உபயோகிக்கப்படவில்லையென்றால் வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்திருக்கிறார் அவர்.

குறிப்பாக தோல் நோய், அரிப்பு போன்ற போன்றவற்றை உருவாக்கிவிடும் என்பதால் மாஸ்க் அணிவதில் கூடுதல் அக்கறை செலுத்துமாறு தெரிவித்திருக்கிறார்.

ஒரே மாஸ்க்கை பல பல தடவை பயன்படுத்துதல்

ஒரு சாதாரண மாஸ்கை பல தடவை ,அல்லது பல மணிநேரம் பயன்படுத்துவதால் தோல் நோயை உருவாக்கி விடும். மாஸ்கிலிருக்கும் கிருமிகளால் இவை ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு என்கிறார் இவர்.

ஒருமுறை மட்டுமே பயன் படுத்தும் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும் என்கிறார் இவர். ஒருமுறை பயன்படுத்தப்படும்  மாஸ்க் ஒரு நாளுக்கானது அல்ல,  ஆறு முதல் எட்டு  மணிநேரத்திற்கானது மட்டுமே!. பலர் இப்படிச்செய்வதில்லை. பலர் இதில் தவறு செய்வதாகக் கூறுகிறார் டாக்டர் மாலினா ஒஸ்மான்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் மாஸ்க் 12 நேரத்திற்குமுன் எறியப்படவேண்டும். இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எறிதல் என்பதிலும் பொது ஒழுங்கு இருக்கிறது. அதையும் பலர் பின்பற்றுவதில்லை. எங்கு எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்றிருக்கிறது.

மறு பயனீட்டு மாஸ்க்குகள்  எட்டு மணி நேரம் அல்லது ஒருமுறை பயன்பாட்டுக்குப்பின் சுத்தம் செய்யப்படவேண்டும். ஒரு முறையிலான மாஸ்க் ஒருதடவைக்குமேல் பயன்படுத்துதல் கூடாது.  தோல் நோய்களை உணடாக்கும் கிருமிகளை உற்பத்திசெய்யும் இடமாக மாஸ்குகள் ஆகிவிடவும் கூடாது.

தொற்று நோய்க்காகப் பயன்படுத்தப்படும் மாஸ்க் பயன்பாடு வேறு நோய்களை பரப்பும் கருவியாக அமைந்துவிடக்கூடாது.

மாஸ்க் பயன்பாட்டை முறையாகக் கடைபிடிக்காமல் போனால் அவற்றால் வேறு பலநோய்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது போல் ஆகிவிடும் என்று ஜப்பானின் நாரா நுண்துறை ஆய்வாளரான சித்தி அப்துல்லா அப்துக் காய்ர் கூறுகிறார். மேலும் மறு பயனீட்டுக்கான மாஸ்க் நீண்ட நாளைக்கும் பயன்படுத்த இயலாது. காரணம், அதை பல முறை உபயோகிக்கும்போது  கிருமிகள் முற்றாக ஒழிந்துபோகவும் வாய்ப்பில்லை. கிருகிகளை ஒழிப்பது எளிதான காரியமல்ல.

மிகவும் அவசரமான சூழலில் இதுபோன்ற தவறுகள் உணரப்படாமலும் போகக்கூடும். ஏதேனும் நோய்த்தொற்று வந்தபின் யோசிப்பதில் பயனே இல்லை வந்தபின் கூடுதாலான கவனிப்பும் பெரும் சுமையாகிப்போகும். அதற்குமுன் எந்த தொற்றும் வராமல் இருந்தால் அதுதான் நல்லது. அதற்குத்தேவை அவசரமின்மையும் நிதானமும் முக்கியம். 

முகக்கவசம் அணிவது தொல்லையான வேலை. அதே வேளை அலட்சியமாக இருப்பதும்  விபரீதமாகிவிடும் என்பதால், மாஸ்க் விஷயத்தில் மிகத்தெளிவாக இருப்பதும் முக்கியம். குழந்தைகளின் மீதான அக்கறை அதிகமாக இருக்கவேண்டும். 

 

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here