மலாக்கா: அலோர் காஜாவில் உள்ள ஒரு தொழிற்கல்வி கல்லூரி வரும் மே 4 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது. அக்கல்லூரியின் 37 மாணவர்களுக்கு கோவிட் -19 க்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா சுகாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுவின் தலைவர் டத்தோ ரஹ்மத் மரிமன் கூறுகையில், டத்தோ ஶ்ரீ முகமட் ஜைன் தொழிற்கல்வி கல்லூரிக்கு (KVDSMZ’s) தற்காலிகமாக மூட உத்தரவு நேற்று மாநில சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 16 அன்று கோவிட் -19 சிவப்பு மண்டலத்தைப் பார்வையிட்ட பின்னர் KVDSMZ’s விடுதிக்குத் திரும்பிய ஒரு மாணவரிடமிருந்து முதல் தொற்று ஏற்பட்டது. முதல் வழக்கு வெளிவந்ததைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் 196 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்வைப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் 37 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தற்காலிகமாக மூடப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த 37 பேருடன் நெருங்கிய தொடர்புகளில் இருக்கும் 430 பேருக்கு கூடிய விரைவில் சோதனைகள் தொடரும் என்று ரஹ்மத் கூறினார்.
மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 16 முதல் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து பல மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரஹ்மத் மேலும் தெரிவித்தார்.