வயப்படும் பிரிவுகள்

போலீசாரின் கரிசனம் …!

கொரோனா காலம் கொடூரமானகாலமா? அன்பை அதிகரிக்கும் காலமா? 
இப்படியொரு பட்டிமன்றத்தை இளைர்ஞகளுக்கு ஏற்படுத்தினால்  பிரிவின் வருத்தம் வெளிப்படுவதை காண முடியும்.
ஊர் கடந்து பிரிந்திருக்கும்  காதலர்கள் நீண்ட நாட்களாக சந்திக்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் பிரிவு வருத்தத்திற்கு உரியதுதான். இதற்கு போலீசாரின் அனுமதி வேண்டும். 
பிரிந்திருக்கும் காதலர்களுக்கு போலீசார் என்ன  சொல்ல முடியும்? என்ன பதில் சொன்னால் காதலர்கள் ஏற்றுக்கொள்வார்கள்  என்பதற்கு ஒரு சுவையான சம்பவம் இது.
மும்பாய் நகரில் அஸ்வின் வினோத் என்ற வாலிபர் காதலியை சந்திக்க டுவிட்டர் மூலமாக போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தார். அதில் வாலிபர், “நான் எனது காதலியை பிரிந்து தவிக்கிறேன். எனவே அவரைப் பார்க்க நான் எனது வாகனத்தில் எந்தவகை  ஸ்டிக்கரை ஒட்டிச்செல்ல வேண்டும்” என கேட்டிருந்தார். (அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு வேறு வேறு வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை அங்கு அமலில் உள்ளது).
போலீசார் அந்த வாலிபருக்கு, “காதலியை சந்திப்பது உங்களுக்கு அத்தியாவசியமானது என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களின் அத்தியாவசிய அல்லது அவசர பட்டியலில் அது வரவில்லை. தூரத்தில் இருப்பது இருமனங்களுக்கு இடையே அன்பை வளர்க்கும். தற்போது நீங்கள் நலமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். தற்போதைய கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான். பொறுத்து இருங்கள் ” என கூறியுள்ளனர்.
இச்செய்தி மும்பையில் நடந்ருந்தாலும் ஊருக்கு ஊர் நிபந்தனைகள் மாறுபட்டிருக்கும். அது ஒரு பிரச்சினையல்ல. ஆனாலும் செய்தி ஒன்றுதான். போலீசாரின் அணுகல் எப்படி என்பதுதான் கேள்வி.
போலீசாரின் நடவடிக்கை என்பது முக்கியமானது என்பதால் இதைப்பின்பற்றலாமே! என்பதும் சின்ன அலோசனைதான்.
காதலர்கள் கூடுதலாக (வ)பயப்படுவார்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here