-உலக சுகாதார அமைப்பு வேதனை
இந்தியாவில் கொரோனா அதிகம் வேகமெடுப்பதற்கு என்ன காரணம் என்பதற்கான விளக்கம் இல்லை. பாதுகாப்பையும் தகர்த்துவிட்டு உறவினர் போல் ஒட்டிக்கொள்ளும் கொரோனாவின் தாக்கத்தால் இந்தியா திணறிக்கொண்டிருக்கிறது
பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது. அதை கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கூறியதாவது:-
இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. மிகுந்த வேதனையை அளிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மரியாவான் கூறும்போது, ‘‘இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நமது பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது. அதை கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும்’’ என்றார்.