ஜப்பான்.. ஒழுக்கத்திற்கும்  சுறுசுறுப்பிற்கும் பிரசித்திப் பெற்ற ஊர்

இரண்டாம் உலகப் போரில் பெரும் அழிவைச் சந்தித்த ஜப்பான் இன்று உலக மக்கள் வியந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்திருக்கிறது எனில் அந்நாட்டு மக்களின் ஒழுக்கமும் சுறுசுறுப்பும் உழைப்பும்தான் காரணம்..வாருங்கள் ஜப்பானைப் பற்றி காண்போம்!

புவியியல்

– தலைநகரம் : தோக்கியோ

– ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான (6,852 தீவுகள்) நாடாகும்.

– பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது.

– எரிமலைகள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்படும்.

– ஏறத்தாழ ஜப்பானின் 73 விழுக்காடு நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு பயன்படாத வகையிலும் உள்ளது.

பொருளாதாரம்

– உலகின் மூன்றாம் பெரிய பொருளாதார வலம் படைத்த நாடு.

– பண மதிப்பு : ஜப்பானிய யென்

மொழியும் மக்களும்

– இங்குள்ள மக்கள் உலகிலேயே அதிகபட்ச வாழ்நாளைக் கொண்ட மக்களாகத் திகழ்கின்றனர்.

– சிந்தோவும் பௌத்தமும் ஜப்பானின் முக்கிய சமயங்களாகும். கிறிஸ்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.

சிந்தோ (அல்லது ஷிண்டோ) என்பது ஜப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள்படும் ஜப்பானிய மொழிச் சொல்லாகும் (சின் – கடவுள், தோ-வழி). இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது.  

உணவு முறை

– இங்கு தெம்புரா, சுஷி, தெரியாக்கி கோழி போன்ற உணவுகள் பிரபலம் என்றாலும் பிற வகை உணவுகளும் இங்கு சுவையாகவும்  சுகாதாரமாகவும் இருக்கும்.

– இங்கு மீன் வகை உணவுகளையும் ஜப்பான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அதிகம் கடலுக்கருகில் ஜப்பான் மக்கள் வாழ்வதால் சால்மன், சுறா போன்ற மீன் வகைகளைச் சாப்பிடுகின்றனர்.

இங்கு வெண்டிங் மெஷின் உணவுகள் மிகப் பிரபலம். ஜப்பான் மக்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அதனால் வரிசையைில் நின்று உணவு வாங்கி நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்பதற்காக வெண்டிங் மெஷினில் ரெடிமேட் உணவுகளை அதிகம் உண்கின்றனர்.

தேசிய அடையாளங்கள்

– பாரம்பரிய விளையாட்டான சுமோ ஜப்பானின் தேசிய விளையாட்டாக மதிக்கப்படுகிறது. தற்காப்புக் களைகளான ஜூடோ, கராத்தே போன்றவையும் வழமையில் உள்ளன.

ஜப்பானைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் :

* ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்.

* ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்வு அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடாகும்.

* ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

* ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பரிட்சைகளே இல்லை. கல்வியின் நோக்கம் விஷயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரிட்சை மூலம் அவர்களை தரப்படுத்த அல்ல என்கிறார்கள்.

* ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாவுதல் என்பதே அங்கு இல்லை.

* ஜப்பானில் ஒரு வருடத்தில் ரயில்கள் தாமதமாக வந்த நேரம் சராசரியாக சுமார் 7 விநாடிகள் மட்டுமே.

* ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட உடன் அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

* ஜப்பான் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று. இங்கு மிகவும் பொதுவான குற்றங்களில் ஒன்று வசதியான கடைகளுக்கு வெளியே சைக்கிள் இல்லை என்றால் குடைகளை திருடுவதுதானாம்.

* பச்சை குத்திக்கொள்வது ஜப்பானில் நாகரிகமான ஙெ்யல் அல்‘. மோசடிக் கும்பல்கள் மற்றும் குற்றங்கள் செய்கிறவர்களும்தான் இப்படி பச்சை குத்தி கொள்வார்கள் என இங்குள்ள மக்கள் நினைக்கிறார்களாம். அதனால் இங்கு உள்ள புகழ்பெற்ற ஆன்சென் எனப்படும் சூடான நீரூற்றுகளில் பச்சை குத்திக்கொண்டு போகிறவர்களை விடமாட்டார்களாம்.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here