தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நடைபெறுகிறது.
கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு கொரொனா பயத்தையும் விஞ்சி நிற்கிறது. முதல்வர் வரிசையில் ஐவரின் முகம் அட்டகாசமாய் இருந்தாலும் திமுக வின் முகம் ஓங்கியிருப்பதாக மலேசியாவிலும் பேசப்படுகிறது.
ஆனாலும் எடப்பாடியாரும் சளைத்தவரல்லர் என்பதை சில காலமாகவே நிரூபித்திருக்கிறார்.
எது எப்படியோ தேர்வு பெறும் முதல்வருக்கு சவால் விடும் அளவுக்கு கொரோனாவின் பிடி ஓங்கி நிற்கிறது. இதைச்சமாளிப்பது சாதாரணம் அல்ல. தமிழக மக்களை மீட்டெடுக்கும் மாபெரும் பொறுப்பு புதிய முதல்வருக்கு உண்டு.
இன்று இரவு சிலரின் உற்சாகத்திற்கு மருந்தாக இருந்தாலும் பலரின் கனவு கலைந்துபோகும் மேகங்களாகத்தான் இருக்கும்.