மன வலிமையுடன் வாழ்ந்தால் வாழ்வில் மாற்றம் காணலாம்

 

மன வலிமைக்கு சரியான தேர்வு  தன்னம்பிக்கை –  எம். முனியாண்டி

கப்பளா பத்தாஸ்-
வட செபெராங் பிறையில் உள்ள, கப்பளா பத்தாஸ் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் துப்புரவுப் பணி சமூகச் சேவையாளர்களின் துணையுடன் நடைபெற்றது.

செபெராங் பிறை வட மாவட்ட போதைப்பொருள் மறுவாழ்வு மையம்  பினாங்கு இந்து சங்கப் பேரவை இந்நிகழ்ச்சிக்கு இணை ஆதரவை வழங்கின.

கப்பளா பத்தாஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கோ.விஜயன், க.பாண்டியன், செபெராங் பிறை வட மாவட்ட போதைப்பொருள் மறுவாழ்வு அதிகாரி அனிதா ராமன் , ஆலய நிர்வாக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

போதைப்பொருள் உட்கொண்டு பிறகு பல ஆண்டுகளாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்களின் வாழ்கையைத் தொடங்க உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், மன வலிமையுடன் வாழ்க்கைப் பாதைக்கு மீண்டும் திரும்புபவர்கள் பழைய சம்பவங்களை மறந்து வாழ்ந்தால் வாழ்வில் மாற்றம் காணலாம் எனச் சிறப்புரை ஆற்றுகையில் பினாங்கு மாநில இந்து சங்கப் பேரவைத் தலைவர் மா.முனியாண்டி அறிவுறுத்தினார்.

மன வலிமை,இறை நம்பிக்கை ஆகியவை முக்கியமானது என்றும் செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் தங்களின் வாழ்வை மாற்றி தூய சிந்தனையுடன் செயல்பட்டால் புதிய மறுதலைப் பெற முடியும் எனவும் அவர்  மேலும் கூறினார்.

 

செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here