சிங்கங்களுக்கு கொரோனா

– அதிர்ச்சி செய்தி!

இந்தியாவில் முதல் முதலாக 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் ஒரு கோடி பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் விலங்குகள் எதற்கும் பாதிப்பு இல்லை.

இந்நிலையில் இப்போது முதல் முதலாக ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கங்களுக்கு காய்ச்சலும், சரியான உணவு உட்கொள்ளாத பிரச்சினையும் இருந்ததால் சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here