அனைத்துலக பசுமை புத்தாக்க போட்டியில் கார்த்திகேசன் 2 தங்கம் வென்று சாதனை.

அனைத்துலக ரீதியில் இயங்கலை வழியாக நடத்தப்பட்ட பசுமை புத்தாக்க போட்டியில் கார்த்திகேசன் சந்திரசேகரன், 2 தங்கப் பதக்கங்கள் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இங்கு அருகிலுள்ள புரோட்டன் சித்தி இடைநிலைப்பள்ளி மாணவரான கார்த்திகேசன் அனைத்துலக சுற்றுச்சூழல் புத்தாக்க மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற போட்டியில் பங்கு கொண்டு வெற்றி கண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2021 முதல் மே மாத தொடக்கம் வரை நடைப்பெற்ற இப்போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 222 குழுக்கள் கலந்து கொண்டன.

சுற்று சூழல் மேம்பாட்டிற்கு இத்தகைய புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. அருகிலுள்ள பேராக் ரிவர் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த கார்த்திகேசன், பல தேசிய மற்றும் அனைத்துலக சுற்றுச் சூழல் புத்தாக்கப் போட்டியில் கலந்து பல பதக்கங்களைப் பெற்றுள்ளது பெருமைக்குரியது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here