மனித சக்திக்கு ஈடாக ட்ரோன்கள்

கைமேல் பலன் கொடுக்கும்!

இற்றைச்சூழலில் , குறிப்பாக பெருநாள் காலங்களில் மக்கள் நடமாட்டத்தைக்  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகக்கடினம். அனைவரையும் கண்காணிப்பது என்பதும் முடியாத காரியம் . 

மக்கள் இன்னும் முறையான சுகாதார விதிகளைப்பின் பற்றவே இல்லை என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. காரணங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

கூடல் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பதும் நோய் கண்டவர்கள் தங்களை அறியாதிருப்பதும்  முக்கிய காரணியாக இருக்கின்றது.

ஒவ்வொருவரும் கூடல் இடைவெளிக்கு முக்கியத்துவம் வழங்கினால் தொற்று பரவுவதிலிருந்து விலகி இருக்க முடியும்.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களை அடையாளம் கண்டு, அந்த இடங்களில் பாது காப்பை கூட்ட வேண்டும். இது சாத்திய என்பதும் இன்னொரு பிரச்சினை.

நோன்புப்பெருநாள் நெருங்கிவிட்டது. மக்கள் இறுதி நேர தீவிரத்தில் இருப்பார்கள், ஆதலால் மக்கள் வழக்கத்திற்கு மாறாகவே பொதுச்சந்தைகளில் கூடுவர். இதைத்தடுக்க முடியாது. தடுக்காது போனால் குடி முழுகிவிடும். அவர்களைக் கண்காணிக்க மனித சக்திக்கு அதிக வேலை கொடுக்க வேண்டிவரும்.

இதற்காக ட்ரோன்கள் ஆகாயக் கண்கள் போல் செயல்படுகின்றன. மிகவும் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. அதில் இணைக்கப்பட்டிருக்கும் காமிரா, ஒலிபெருக்கிக் கருவிகள், வீடியோ பதிவு மூலம் மக்களை எச்சரிக்கைப்படுத்திவிடமுடியும்.

ட்ரோன்களின் பயனீடுகள் அதிகம் எதிர்பார்க்கபடுவதாகவே வரும் காலத்தில் இருக்கும் தரைவழி விநியோகச் சேவைகளைக்குறைத்து  வான்வழி விநியோகத்திற்கு பயன்படுத்தும் காலம் கைக்கு எட்டிய தூரத்திலேயே இருக்கிறது.

நெரிசல் மிக்க காலங்களில் ட்ரோன்கள் சேவை அவசியமாகிவிடும். குறிப்பாக, மருந்து, ரத்தம் போன்ற அத்தியாவசிய விநயோக முறைக்கு முன்னேற முடியும். 

இதற்கான் போக்கு வரத்து முறைகள் வகுக்கப்படவேண்டும்.

மனிதன் செய்ய முடியாததை ட்ரோன்கள் செய்கின்றன என்பதில் நிச்சயம் மகிழ்ச்சியடையலாம். 

குறைந்த மனித சக்கியோடு  ட்ரோன்கள் பயன்பாடு பலன் அளிக்கும் என்பதால், விழக்கால நெரிசல்மிக்க இடங்களில் ட்ரோன்கள் சேவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here