மீண்டும் எம்.சி.ஓ- தடுமாறும் இந்திய உணவங்கள்

இருவர் இருவராக உணவருந்த

அனுமதி வேண்டும்!

உணவக உரிமையாளர்கள் கோரிக்கை

தற்போது நாட்டில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் உணவக உரிமையாளர்கள் தங்களது சிரமங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முதல்அமல்படுத்தப்பட்டு இம்மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் உணவக உரிமையாளர்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் இதற்கு மாற்று நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது பல துறைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் உணவகங்கள் முழுமையாகச் செயல்படாத நிலையில் மீண்டும் பொட்டலம் வழியே உணவுகள் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதால் உணவகங்களில் வியாபாரம் கிட்டத்தட்ட 60 விழுக்காடு வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக பந்திங் நியூ லக்கி உணவக உரிமையாளர் ரெ.சிவதாஸ் தெரிவித்தார்.

இம்முறை நாட்டில் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் பெரும்பாலான துறைகள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டதுபோல் உணவகங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் என்று காத்திருந்ததாகவும் எனினும் உணவகங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாததால் மீண்டும் உணவக உரிமையாளர்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளதாக ஜென்ஜாரோமில் எஸ்.வி.எல். உணவக உரிமையாளர்கள் லோகேஸ்வரன், திருமதி ஷாமலா ஆகியோர் தெரிவித்தனர்.
கடந்த முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு உணவகங்களில் இரண்டு பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டபோது அரசாங்கத்தின் விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை முழுமையாகக் கடைப்பிடித்ததாகவும் இந்த விதிமுறைகளை தாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் எனவே உணவங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என்று பிரிக்பீல்ட்ஸ் பெருமாள் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் உணவகங்களில் தற்போது பொட்டலங்களின் வழி மட்டுமே உணவுகளை வியாபாரம் செய்ய முடியும் என்றும் இதனால் வழக்கமான வியாபாரத்தை விட கிட்டத்தட்ட சரிபாதி வீழ்ச்சியடையக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அரசாங்கம் உணவக உரிமையாளர்களின் சிரமத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பூச்சோங் ஸ்ரீ மீனாஸ் உணவக உரிமையாளர் குணசேகரன் கூறினார்.
கடந்த முறை அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் உணவக உரிமையாளர்களுக்கு மாதச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டதாகவும் வழக்கத்தை விட பாதி அளவே வியாபாரம் நடந்தாலும் உணவகப் பணியாளர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் கட்டணங்களை முழுமையாகச் செலுத்த வேண்டியிருந்தாகவும் இந்நிலை மீண்டும் உணவக உரிமையாளர்களுக்கு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் தங்களின் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பந்திங் தெலுக் பூனூட் அஷ்வின் உணவகத்தின் உரிமையாளர் சி.முரளி கேட்டுக்கொண்டார்.

 

முன்பு உணவங்கள் வழக்கமாகச் செயல்பட்டபோது வார இறுதி நாட்கள் உட்பட மற்ற பொது விடுமுறை நாட்களில் காலை பசியாறல், அல்லது மதிய, இரவு உணவிற்காக பொதுமக்கள் குடும்பத்தோடு உணவகத்திற்கு வருவது வழக்கமாகி இருந்ததாகவும் தற்போது உணவங்கள் முழுமையாகச் செயல்பட முடியாது என்பதால் மேற்கண்ட வியாபாரம் குறிப்பாக மதிய, இரவு உணவு வியாபாரம் பெரும் அளவில் வீழ்ச்சி காணும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும்போது குளிர் பானங்கள் உட்பட தேநீர், காப்பி போன்ற மற்ற வகை பானங்கள் வியாபாரமும் இருந்ததால் உணவக வியாபாரம் சீராகச் சென்று கொண்டிருந்ததாகவும் தற்போது பொட்டலங்களில் உணவுகளை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதால் பானங்கள் விற்பனை இல்லாமல் இனிமேல் வியாபாரம் பாதி அளவுக்கு குறைந்து விடும் என்று அஷ்வின் உணவக பந்திங் கிளை உரிமையாளரான திருமதி தனலெட்சுமி குறிப்பிட்டார்.

உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும்போது குளிர் பானங்கள் உட்பட தேநீர், காப்பி போன்ற மற்ற வகை பானங்கள் வியாபாரமும் இருந்ததால் உணவக வியாபாரம் சீராகச் சென்று கொண்டிருந்ததாகவும் தற்போது பொட்டலங்களில் உணவுகளை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதால் பானங்கள் விற்பனை இல்லாமல் இனிமேல் வியாபாரம் பாதி அளவுக்கு குறைந்து விடும் என்று அஷ்வின் உணவக பந்திங் கிளை உரிமையாளரான திருமதி தனலெட்சுமி குறிப்பிட்டார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் காய்கறிகள், மீன்கள், உட்பட உணவுகள் சமைப்பதற்கான பல பொருட்களின் விலைகள் உச்சத்தில் உள்ளதாகவும் இருப்பினும் உணவு விலைகளை அதிகரிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வழக்கமான விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் இதனால் ஏற்கெனவே வியாபாரம் சற்று பதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் உணவக வியாபாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பந்திங், சிம்பாங் மோரிப் வி.கே.ஜி.உணவக உரிமையாளர் திருமதி கஸ்தூரி தெரிவித்தார்.
ஏற்கெனவே உணவுகள் தயாரிப்பதற்கான அத்தியாவசிப் பொருட்களும் விலை உயர்ந்து விட்டதால் உணவக உரிமையாளர்கள் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளதாகவும் தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தாங்கள் மீண்டும் இப்பிரச்சினையை எதிர்நோக்கக்கூடும் என்றும் இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் உணவகங்களை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு விரைந்து ஆவன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

எம்.எஸ்.மணியம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here