தென்னை தாங்கும் தெளிந்த நீராம்!

(இன்று அன்னையர் தினம் )

முதன்மைக் கடவுள்

உலகம் போற்றும் உன்னத நாளை

உயர்வாய் எண்னுகவ! – அம்மா,

இலகு  வார்த்தை சொன்னால் சுகமே

இறையாய் போற்றுகவே!

 

என்னை உன்னை பெற்றதி னாலே

எழுத்தால் போற்றுகவே- உயர், 

தென்னை தாங்கும் இளநீர்  அன்பால்

திருவாய் சாற்றுகவே!

 

அன்னை என்றால் அகிலம்  போற்றும்

அவளுக் கீடில்லை!- தினம், 

மண்ணைத் தொட்டு  வணங்கிடல் போலும்

மறந்தும் கேடில்லை!

 

அன்னையர் தினத்தை இன்றே  போலும் 

என்றும் போற்ருகவே!- அவள்

உன்னில் உயிரைப்  பதித்தவ  ளாக

உயிராய் வாழ்த்துகவே!

 

உன்றன் வாழ்க்கை உயர்வாய் மாற 

ஊட்டிப் போற்றுகவே!-  அன்பில், 

தென்றல் போல தெளிந்த சொல்லாம்

தமிழால் வாழ்த்துகவே!

 

தமிழும் அவளும் உலகின் தலைமை

தகவாய் போற்றுகவே!- இனத்தால், 

தமிழன் மாண்புடன்  வாழ்ந்தால் போதும்

தாயும் மகிழ்வாளே!ந்

 

-வீர.கா.அருண்மொழித்தேவன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here