புத்ராஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (மே 12) 4,765 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே 3,124 பேர் குணமடைந்து இல்லம் திரும்பி இருக்கின்றனர்.
ஒரு டூவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இது நாட்டின் மொத்த கோவிட் -19 வழக்குகளை 453,222 ஆகக் கொண்டுவருகிறது என்றார். சிலாங்கூரில் 2,082 தொற்றுடன் முதல் நிலையிலும் இதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 540 , சரவாக் 405 உள்ளன.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40,101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 469 ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 244 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.