கடன் வாங்கிய கட்டணத்தை திரும்பச் செலுத்த அவகாசம் தேவை

மலேசியா வங்கிகள்

 

வங்கிகள் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளலாமே!

பிகேபி 3.0 எனும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தைத் தொடர்ந்து அரசாங்கம் மொரோடோரியம் எனும் கடனைத் தள்ளிவைக்கும் சலுகையை  ஆண்டு இறுதிவரை  ஒத்திவைப்பது குறித்து  வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் காரிம் இந்த கட்டணம் தள்ளி வைக்கும் சலுகையை வங்கி நிறுவனங்கள் அமல் படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

வங்கிகளின் அறிக்கைகள் கோவிட் -19 காலக்கட்டத்தில், வங்கிகள் தொடர்ந்து இலாபத்தை அடைந்து வருவதாகக் காண்பிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 31 மார்ச் 2021 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் பப்ளிக் வங்கி பெர்ஹாட்டின் நிகர லாபம் 15.1 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு 1.33 பில்லியனில் இருந்து 1.53 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று அவர் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

இந்த கட்டணம் தள்ளி வைக்கும் முறை வணிகர்கள்,குத்தகையாளர்கள்,சிறு, நடுத்தர வணிகர்கள் யாவருக்கும் பி 40 குடிமக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று ஹசான் காரிம் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here