கொரோனா சிகிச்சைககான மருந்துகளில்

 –ரெம்டெசிவிர் மருந்தை நீக்குவது

அந்தந்த நாடுகளைப் பொறுத்தது!-   WHO

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. 

இறப்பு விகிதத்தை பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கான சிகிச்சைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here