துபாயில் திமுக வெற்றி விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி

தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்ற       மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றிவிழா, இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது

அண்மையில் மாலை அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று, ஆட்சியமைத்த திமுகவின் வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி ரிக்கா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமீரக திமுக அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற விழாவை அமீரக திமுக துணை அமைப்பாளர் பிளாக் துளிப் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய, துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Board of Director Dubai Chamber of commerce and Industries and Chairman , Government of Dubai – Awqaf Endowment funds) தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கி தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக அமைச்சரவைக்கும், உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் ‘வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சென்னை தமிழகத்திற்கு வந்து செல்வதாகவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைத்து, சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பேசியவர் வளைகுடா நாடுகளை சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்வதால் அவர்களும் பலனடையும் வகையில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உயர்த்தினால்,இந்திய அரபுகளுக்கான உறவு பாலமாக திமுக ஆட்சி அமைய வேண்டுமென கேட்டுகொண்டார்.

அதை தொடர்ந்து பேசிய, அமீரக திமுக அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ் மீரான் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியை பெற்று, தமிழக முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டதோடு, உழைப்பு என்பதற்கு அடையாளமாக திகழும் தமிழக முதல்வருக்கு பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் அமீரக மூ. லீக் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, DTS ஜெயந்தி மாலா, பவர் குரூப் MD, ஜாஹிர் ஹுசேன், Allied Motors காமால் , ஆட்டோ விசண் பைரோஸ் , கல்ஃப் நியூஸ் சதீஷ், துபாய் லேடிஸ் அசோசியேசன் தலைவர், மீனாகுமாரி பத்மநாபன், ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் அமீரக திமுக துணை அமைப்பாளர்கள் இர்ஷாத், சரத், சாருமதி, அமீரக திமுக நிர்வாகிகள், அன்பு, இஞ்சினியர் பாலா , ஏஜிஎம் பைரோஸ், வி.எம்.பிரபு, அனீஸ், மணிமொழியன் , இளமுருகன் உள்ளிட்ட அமீரக திமுக நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த சம்சுதீன், இயூமுலீக் பரக்கத் அலி, மதிமுக வில்லிசேரி பாலமுருகன்,எழுத்தாளர் ஆசிஃப் மீரான், சமூக ஆர்வளர் பிலால் அலியார், ரபீக் சுலைமான் தமிழ் ஆர்வளர் பிரபு, மற்றும் மனித நேய கட்சியை சேர்ந்த இப்ராஹிம் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் திமுக உடன் பிறப்புகளும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிறைவாக அமீரக திமுக செயலாளர் முஸ்தஃபா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here