ஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை

ஜாலான் லோக் யூ பகுதியின் அடுக்குமாடி கட்டடத்தின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று பிற்பகல் இந்த துயர சம்பவம் நடைபெற்றது.

12ஆவது மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கு முன்பு அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தததாகவும் ஆனால் திடீரென்று குதித்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அவர் 12ஆவது மாடியில் இருந்தபோது சிலர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 8 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் என தகவல் வழி அறியப்படுகிறது. உயிரிழந்த ஆடவரின் உடல் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த  37 வயதான இந்திய ஆடவர் மலேசியர் என்றும் அவரின் அடையாள கார்டில் (ஐசி) கேமரன் ஹைலண்ட்ஸ் முகவரி இருப்பது தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here