ஆலங்கட்டி மழையால் உயிர் போனது

 ஓட்டப்பந்தய வீரர்கள் பேர் பலி..!    5 பேர் மாயம்…!

சீனாவில்  திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பந்தயத்தில்  ஈடுபட்டிருந்த 20 ஓட்டப்பந்தய வீரர்கள் உயிரிழந்தன்ர்.  மேலும் 5 பேரில் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களைக்  காணவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சீனாவின் வடமேற்கு கான்சூ மாநிலம் பைன் நகரில் உள்ள மலைப் பகுதியில் 100 கிலோ மீட்டர் தூர மாரத்தோன் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

சீனாவில் நோய் தொற்று மற்றும் இயற்கை சீற்றம் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்ற வேளையில்   திடீரென வானிலை மாறி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது  அதிக காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது.

இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here