கிழக்கு மாநிலமான கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளி எனும் பெருமை கோலக்கிராய் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாசிர் காஜா தமிழ்ப்பள்ளியையே சாரும். கடந்த சில வருடங்களாக இப்பள்ளி தேசிய ரீதியில் பல சாதனைகளைப் புரிந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் ( குளோபல் ஆலிபியாட் – பசுமை கண்டுபிடிப்பு கண்காட்சி 2021 ) எனும் அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் இப்பள்ளி கலந்து கொண்டது. இயற்கையைச் சார்ந்து வாழும் நாடுகளில் நமது மலேசிய திருநாடும் ஒன்று என்பதற்கேற்ப இயற்கைச் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் மாணவர்கள் தங்கள் ஆய்வினை சமர்ப்பித்தனர்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் நீர்வள பிரச்சனையை அதிக அளவில் எதிர்நோக்கும் மத்தியில் இப்பள்ளி மாணவர்கள் மாதுரி மணிவண்ணன் , கிஷன் தேவன் , அரவின் கவுண்டர் முனியாண்டி , கபிலன் சசிதரன் ஆகியோர் ஆசிரியர் கண்ணன் மாணிக்கம் மற்றும் தலைமை ஆசிரியை திருமதி. அருணா தண்ணிமலை வழிகாட்டலுடன் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் (சிபி 8 ) தயாரிப்பில் பயன்படுத்தபட்ட மலேசிய சுற்றுச்சூழல் மையத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நீரின் தரத்திற்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மையமாக கொண்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
இந்த புத்தாக்கப் ஆய்வின் இறுதியில் இப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தனர்.