பினாங்கு மாநிலத்தின் மின்சார மானியம்

 

இக்கட்டான சூழலில் இனிப்பான செய்தி!

பினாங்கு மாநில  அரசு அறிவிப்பில்  சுற்றுலாத் துறையினருக்கான மின்சாரம் மானியம் இன்று முதல் விண்ணப்பத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

மாநில சுற்றுலா , படைப்பாற்றல் பொருளாதாரக் குழுத் தலைவர் யோஹ் சூன் ஹின், வழங்கிய  அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் பினாங்கு சுற்றுலாத் துறைக்கு வெ.1 மில்லியன் ஒதுக்கீடு செய்வதன் மூலம் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 க்கு மாநில அரசு விரைவாக பதிலளித்துள்ளது.

சுற்றுலா, ஆக்கபூர்வமான தொழில்களின் நிலைத்தன்மை பினாங்கிற்கு மிக முக்கியமானது, மேலும் இந்த மானியம் இந்த முக்கியமான காலகட்டத்தில் அவர்களின் நிதிச் சுமையை ஓரளவு தணிக்க முடியும் என்று நம்புவதாக அவர் ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த  மானியம் மாநிலத்திற்குள் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், பயண முகவர் நிலையங்கள், சுற்றுலாத் தளங்கள், தீம் பூங்காக்களுக்கு வழங்கப்படும்.

மேலும் ஜூன் 25 வரை இதற்கான விண்ணப்பத்திற்கு திறந்திருக்கும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெ.5,000 மானியம் கிடைக்கும்; நான்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெ. 4,000; மூன்று நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெ.3,000; இரு நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெ. 2,000, ஒற்றை நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெ.1,000, ஆர்க்கிட் மதிப்பீடுகள் 1,2 மற்றும் 3 கொண்ட ஹோட்டல்களுக்கு வெ.800 கிடைக்கும்.

இன்னும் மதிப்பீடுகளைப் பெறாத பட்ஜெட் ஹோட்டல்கள் , ஹோட்டல்களுக்கு வெ.500 கிடைக்கும்; தீம் பூங்காக்கள் வெ.5,000); சுற்றுலா இடங்கள் வெ.1,000,  பயண முகவர் வெ.1,000 எனவும்  தகுதியான வணிகங்கள் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய www.pdc.gov.my ஐப் பார்வையிடலாம் அல்லது விசாரணைகளுக்கு petace.tnb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here