வேண்டும் வீட்டுக்கு வீடு சோதனை

Press conference by Selangor Mentri Besar Datuk Seri Amirudin bin Shari on Selangor E-Bazar Raya Bersama Shopee. Reporter : Farid (metro)

தீரட்டும் மக்கள் வேதனை!

சாதாரணமாக  தடுப்பபூசி போட்டுக்கொள்ள என்ன வழி என்று தெரியாமல் சிலாங்கூர் மக்கள் தவித்துக்கொண்டிருந்தனர் என்பது உணரப்பட்டிருக்கிறது.

இதற்கு விடை காணும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசின் அறிக்கை ஏழை மக்களுக்கு பால் வார்த்தது போல் அமைந்து, நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருப்பதுபோல் ஆள் பலத்திரட்டலின் அடிப்படையில் வீட்டுக்கு வீடு தடுப்பூசி சோதனை  என்பது மிகச்சிறந்த முன்னுதாரணமாகும். 

தொண்டூழிய இயக்கத்தினர் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களின் உதவியோடும் அந்தந்த வட்டாரத்தின் மருத்துவக் குழுவோடும் வீடு வீடாகச்சென்று சோதனை செய்வது மிகப்பெரிய உதவியாகவே இருக்கும். 

சிலாங்கூர் மாநிலத்தில் இப்போது தொற்று அதிகமாகிவருகிறது. இதற்குச் சரியான  தீர்வு  வீடு வீடாகச் செல்வதுதான் பரிகாரமாக இருக்கும். 

விரைந்து இதற்கு வழி காணுமாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here