சிங்கப்பூரில் புதிதாக கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 74 வயது மலேசியர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று பதிவான 26 புதிய கோவிட் -19 தொற்றுகளில் 74 வயதான மலேசிய ஓய்வு பெற்றவர் ஒருவர் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளது.

அவரது சோதனை முடிவு மே 25 அன்று  உறுதி செய்யப்பட்டது. மார்ச் 19 அன்று அவர் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றார் என்று அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட முழுமையான  விவரங்களின் வழி தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 61,916 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் 18 பேர் வெண்டிலேட்டர் உதவியைப் பயன்படுத்துகின்றனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here