செல்லப்பிராணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை செலுத்த தொடங்கியது ரஷ்யா

மொக்சிகோ: ரஷ்யாவின் பல மாநிலங்களில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளை செலுத்த தொடங்கியுள்ளன என்று ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழுவான ரோசல்கோஸ்னாட்ஸர் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், அர்ஜென்டினா தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கார்னிவாக்-கோவ் (Carnivak-Cov) தடுப்பூசியை ரஷ்யாவிடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன என்றும் இத் தடுப்பூசி ஆறு மாத காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனிதர்களுக்கு நோயைப் பரப்புவதில் விலங்குகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்பதற்கு தற்போது அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினாலும், தங்களது செல்லப்பிராணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை செலுத்துவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here