கொரோனா தொற்று உள்ளவர்களே ! நெருங்காதீர்!
ஆழ்ந்த யோசனை அறவே தேவையில்லை!
ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கனமான எச்சிலின் துகள்கள் 2 மீட்டர் தூர இடைவெளியில் கீழே விழும்.
ஆனால் ‘ஏரோசோல்’ எனப்படும் காற்றில் மிதக்கும் தன்மையுள்ள எச்சிலின் சிறிய துகள்கள் 10 மீட்டர் தூரம் வரை மிதந்து பின்னர் விழும். இந்த ஏரோசோல் துகள்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும் தன்மை கொண்டதாம்.
காற்றில் இருந்து துகள்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதி என்று அறுதியாக கூறப்படுகிறது.

இவற்றுக்கும் மேலாக நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களைத்தேர்வு செய்வதே நல்லது. ஏனென்றால் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து வைப்பதோடு நல்ல காற்றோட்டமுள்ள சூழலில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.