எஸ்ஓபியை மீறிய புகழ்பெற்ற பாடகி சித்தி நூர்ஹலிசாவிற்கு அபராதம்

பெட்டாலிங் ஜெயா: இந்த மாத தொடக்கத்தில் நடந்த இரண்டாவது குழந்தையின் விழாவில் நாட்டின் புகழ் பெற்ற பாடகி டத்தோ ஶ்ரீ  சித்தி நூர்ஹலிசா மற்றும் அவரது கணவர் டத்தோ ஶ்ரீ  காலிட் முகமட் ஜிவா ஆகியோருக்கு தலா  10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

பிரதமர் துறையின் (சமய விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி முகமட் அல்-பக்ரி மற்றும் பேச்சாளர்கள் உஸ்தாஸ் அசார் இத்ரஸ், உஸ்தாஸ் டான் டானியல் மற்றும் உஸ்தாஸ் இக்பால் ஆகியோர் உடன் இருந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.

மூவருக்கும் தலா RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைதி முகமது உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here