எஸ்ஓபி வை மீறிய குற்றங்களுக்காக 746 பேருக்கு அபராதம்; 8 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

புத்ராஜெயா (மே31): பல்வேறு விதமான இயக்க நடைமுறை மீறல்களுக்காக நாடு முழுவதும் 754 நபர்களை போலீசார் நேற்று (மே 30) கைது செய்துள்ளனர்.வளாகத்தினுள் நுழையும்போது விவரங்களை பதிவு செய்யத் தவறியது, முகக்கவசம் அணியாதது, அதிகப்படியான பயணிகளுடன் வாகனங்களில் பயணித்தது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில், 746 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலும் 8 பேர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஓபி நடைமுறைகளை கண்காணிக்கும் பணிக்குழு 68,740 வளாகங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிகர்கள் உட்பட சோதனை செய்ததுடன் மொத்த சந்தைகள்,வழிபாட்டுத் தளங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் கடல் போக்குவரத்து முனையங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 38 சட்டவிரோத குடியேறியவர்களையும் கைது செய்ததுடன் ஏழு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here