கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளா?

  உலர் திராட்சை சிறந்த தீர்வு

உலர் திராட்சையில் வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களை தரும். அதுமட்டுமின்றி கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வை குறைபாடு நீங்கி, பார்வை திறன் மேம்படும். உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் அப்போது உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

மேலும், இதில் சுக்ரோஸ், ப்ரெக்டொஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புசத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், ஒரு லிட்டர் நீரில் 15-20 உலர் திராட்சை சேர்த்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைக்க வேண்டும்.

இந்த நீரை நாள் முழுவதும் குடித்து, திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று அதிகப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஊறவைத்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். 

மேலும் இது உணவு நன்றாக ஜீரணமாக உதவி புரிகிறது. ஏனெனில் திராட்சை அதிகப்படியான நார்ச்சத்துக்களை கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here