தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி சாப்பாடு

 தங்கநாணயம், குலுக்கல் வழி

கவர்ச்சி பரிசுகலாம்!

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக  பல வித கவர்ச்சி வார்த்தைகள் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன.

நாட்டுக்கு நாடு  உருமாறிவரும் கொரோனா போல கவர்ச்சி பரிசுகளும் அறிமுகமாகி வருகின்றன. 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டர் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு உள்ளிட்ட அறிவிப்புகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா 2ஆவது அலையால் இந்தியாவில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 மருத்துவர்கள் தொற்றால் இறந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் 32 மருத்துவர்கள், அசாமில் 8 மருத்துவர்கள் ,பீகாரில் 96 மருத்துவர்கள், சத்தீஸ்கரில் மூன்று மருத்துவர்கள் ,டெல்லியில் 107 மருத்துவர்கள் ,குஜராத்தில் 31 மருத்துவர்கள் ,ஜார்கண்டில் 39 மருத்துவர்கள் ,மத்தியபிரதேசத்தில் 16 மருத்துவர்கள் ,மகாராஷ்டிராவில் 17 மருத்துவர்கள், ஒடிசாவில் 22 மருத்துவர்கள், ராஜஸ்தானில் 43 மருத்துவர்கள், தெலுங்கானாவில் 32 மருத்துவர்கள் , உத்திரப்பிரதேசத்தில் 67 மருத்துவர்கள், மேற்கு வங்காளத்தில் 25 மருத்துவர்கள் என மொத்தம் 594 பேர் கொரோனா 2-ஆவது அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.

இதை மாற்ற வேண்டுமானால் தடுப்பூசி ஒன்றுதான் தற்போதைய  பாதுகாப்பு வழி, அப்படிச்செய்ய மறுத்தால் வந்து சேரும் பழி. அதனால் தடுப்பூசிக்கு பல தரப்பட்ட கவர்ச்சி பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளும் மக்களை ஈர்த்துவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here