WHO நிர்வாகக் குழுவில் மலேசியாவின் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதம் பாபா மீண்டும் தேர்வுசெய்யப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா: மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் மலேசியாவின் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதம் பாபா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.WHO வில் முக்கிய கொள்கைகளை எடுப்பதற்கு தமது கருத்துக்களயும் கூறுவதற்க்கு இப்பதவி உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜெனீவாவில் இன்று (ஜூன் 2) நடைபெற்ற WHO நிர்வாகக் குழுவின் 149 வது அமர்வு மெய்நிகர் கூட்டத்தில், மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துதல், எஸ்.ஓ.பி நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பு நடத்துதல் போன்ற கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மலேசியாவின் முயற்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.

34 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இக் குழுவில் மலேசியாவும் இடம்பெற்று இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here