வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்கள்

 நாசா    மேற்கொள்கிறது

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக புதன்கிழமை அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

பூமிக்‍கு மிக அருகில் இருக்‍கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம் , புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்‍குவதாக நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா?, கிரகத்தின் புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்‍கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here