இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று கூறிய எஸ்.பி.பாலாவிற்கு இன்று 75ஆவது பிறந்த நாள்

பாடு நிலா பாலு என்று அனவராலும் அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று நம்மிடையே இல்லாமல் இருந்தாலும் அவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் என்று கூறியிருந்தது போல் அவரின் பாடல்கள் காலத்திற்கும் அழியாதது.

கொரோனா எனும் கொடிய தொற்று அவரை நம்மிடம் இருந்து பிரித்தாலும் அவர் பாடி சென்ற பல்லாயிரக்கணக்கான பாடல்கள் என்றும் நம்மிடையே இருக்கும்.

இந்தியத் திரைப்படப் பின்னனி பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here