டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு நிறுத்தம்
மிஷன் இம்பாசிபிள் 7’ படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜூன் 14- ஆம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தை அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மிஷன் இம்பாசிபிள் 7 படத்தை கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கி வருகிறார்.