டிரம்பின் பேஸ்புக் (முகநூல்) கணக்கு 2 வருடத்திற்கு முடக்கம்?

வாஷிங்டன்: வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே, “பேச்சாடா பேசுனே.. கொஞ்சம் நஞ்சம் பேச்சா பேசுனேன்னு” அந்த மாதிரி, தன்னுடைய அரசியலில் ஓவராகவே பேசிவிட்டார் டிரம்ப். இப்போது அவரது ஃபேஸ்புக் கணக்கு (முகநூல்) 2 வருடத்துக்கு முடக்கி வைக்கப்பட்டுவிட்டது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே அசால்ட்டாக இருந்த டிரம்ப், கடைசியில் தோற்றுவிட்டார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டார்.ஆனால், தான் தோல்வி அடைந்ததை டிரம்ப்பால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதை ஜீரணிக்க முடியாமல் பதவியேற்க போகும் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

இதன்காரணமாக, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கின. டிரம்பின் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் ஃபாலோ செய்து செய்தனர்.. இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடவும், அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது… ஆனால், ஃபேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்படாமல், தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. முடக்கம் இந்நிலையில், டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 வருஷத்துக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது.

அதன்படி டொனால்டு டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. வரப்போகும் இந்த 2 வருஷத்துக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் ஃடிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அறிவிப்பு இந்த அறிவிப்பை கேட்டும் டிரம்ப் செம டென்ஷனில் இருக்கிறாராம்.. ஏனெனில், சோஷியல் மீடியாதான் டிரம்ப்புக்கு பலமாக இருந்தது.. இதைவைத்துதான், எதையாவது பேசி தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.. அதன்மூலம் பெருகும் வன்முறையில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.. இப்போது மொத்த கணக்கையும் முடக்கவிடும், “தனக்கு தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை இது” என்று சொல்லி வருகிறார். டிரம்ப்பாவது, சும்மா இருக்கிறதாவது? அதுவும் 2 வருஷத்துக்கு..? எதையாவது செய்வார்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here