தடுப்பூசிக்கான முன்பதிவு செயலியில் (MySejahtera) பயன்பாட்டை இலகுவாக்க, உதவிச் சேவை வசதி (help desk) அறிமுகம்.

பெட்டாலிங் ஜெயா (ஜுன்5): மைசெஜாத்ரா (MySejahtera) செயலியை பயன்படுத்துபவர்களுக்கு அச்செயலியில் தடுப்பூசிக்கான முன் பதிவுகள், பதிவுகளை ரத்துச்செய்தல் மற்றும் பதிவினை மாற்றுதல் போன்றவற்றை இலகுவாக கையாளுவதற்காக “help desk “ எனும் உதவிச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக கோவிட் தடுப்பூசி திட்டத்தின் செயலாக்கக்குழு (JKJAV) தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தடுப்பூசிக்கான முன் பதிவுகள் (vaccination Appointment) என்ற அம்சத்தை அழுத்தியவுடன் (click) அதில் மூன்று விருப்பங்கள் (options) தோன்றும் இதில் முதலாவது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கான முதல் பதிவை சமர்ப்பித்த பின், நன்றி என்ற பதில் கிடைக்கும்.

இரண்டாவதாக, ஏற்கனவே அஸ்ட்ரசெனெகா தடுப்பூசிக்காக பதிவு செய்திருந்த விண்ணப்பத்தை ரத்து செய்தல் என்றும் மூன்றாவதாக
தடுப்பூசியை செலுத்துவதற்கான தேதியை மாற்றம் செய்தல் என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கோவிட் தடுப்பூசியை முற்பதிவு செய்வதில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் அதற்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் இச் செயலியில் (MySejahtera) புது அம்சம் இணைக்கப்பட்டது என்றும் அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here