புத்ராஜெயா (ஜூன் 6): மலேசியாவில் இன்று புதிதாக 6,241 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையை 616,815 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (ஜூன் 6) மிகக் கூடுதலாக சிலாங்கூரில் 2,178 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து சரவாக்கில் 600 தொற்றுக்களும் ஜோகூரில் 565 தொற்றுக்களும் பதிவாகின என்று சுகாதார அமைச்சகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
மேலும் 24 மணி நேரத்தில் 87 பேர் இக்கொடிய நோயினால் உயிரிழந்தனர். இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,378 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 5,133 பேர் இந்த நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே நாடு முழுவதும் நோயிலிருந்து மீண்டவர்களது எண்ணிக்கை 526,809 ஆக உயர்வு கண்டுள்ளது.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இன்னும் 890 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதுடன் 444 பேருக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.