இயக்கங்கள் வழி காட்ட வேண்டும்
மலேசிய அரசாங்கம் பல முன்னேற்பாடுகளை எடுத்து பலகோடி வெள்ளி செலவு செய்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றது. ஆனால், இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியர்களிடையே விழிப்புணர்வு மிகக் குறைவாகவும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தயக்கம் காட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில் தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்து முதல் தடவையாக இங்குள்ள டேவான் துன் ரசாக் தடுப்பூசி மையத்தில் இந்தியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அரசாங்கம் பல கோடி வெள்ளி செலவில் மற்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி வாங்கி மக்களுக்கு இலவசமாக போடப்படுகின்றது. இது ஒரு சிறந்த முடிவு. இருப்பினும் இந்தியர்களிடையே இந்தத் தடுப்பூசி விழிப்புணர்வு மிகக்குறைவாகக் காணப்படுகின்றது,
சீனர், மலாய்க்காரர்கள் தடுப்பூசி போடுவதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். குறிப்பாக வயதான சீனர்களுக்கு அவர்களின் சமூக இயக்கங்கள் பதிவு செய்வதுடன் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றன
ஆகையால் இங்குள்ள இந்திய சமூக இயக்கங்கள் வயதானவர்களுக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் எப்படி பதிவு செய்து கொள்வது என்பது தெரியாதவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
-பி. ராமமூர்த்தி