கொரோனா வைரஸால் ஒரு வாரத்தில் அநாதைகளான 5 பிள்ளைகள்.

Vector illustration cartoon of a poor boy begging with an empty bowl. Homeless kid.

போட்டிக்சன் :கொரோனா வைரஸால் ஒரு வாரத்துக்குள் தமது பெற்றோரை பறிகொடுத்துவிட்டு , பரிதவிக்கும் 5 பிள்ளைகள் கேட்பதற்கே நெஞ்சு கனக்கின்றது.

கோவிட் -19 காரணமாக, தனது தாயார் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, தனது நான்கு இளைய சகோதரர்களை பத்திரமாக பாத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது இன்னும் காதில் கேட்டுக்கொண்டு இருக்கிறது என்கிறார் 23 வயதான முஹம்மது ஹைதீர் ரோட்ஸி.

மே 31 அன்று தம்பின் மருத்துவமனையில் அவர்களின் தந்தை (55) ரோட்ஸி தஹார் வைரஸ் தொற்றால் உயிரிழந்தார், ஆறு நாட்களுக்குப் பிறகு, அவர்களது தாய் நசிதா இட்ரிஸ்(45) துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் இறந்தார்.

இது தொடர்பாக அவர்களது மகன் கூறுகையில் “நாங்கள் முற்றிலும் மனம் உடைந்து விட்டோம், ஆனால் இது அல்லாஹ்வின் விருப்பம் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சோகமான விடயம் என்னவென்றால், எங்கள் பெற்றோருக்கு எங்கள் கடைசி மரியாதை செலுத்த முடியவில்லை, கடைசியாக அவர்களைத் தொட்டு முத்தமிட்டோம், ஆனால் எங்கள் பிரார்த்தனை எப்போதும் அவர்களுடன் இருக்கிறது, ”என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

மேலும் “மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், எமது மறைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு எங்களுடன் பேச நேரம் கிடைக்கவில்லை அத்தோடு என் தந்தைக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் உள்ளது, அதே நேரத்தில் என் தாய்க்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. எனவேதான் அவர்கள் இருவருக்கும் ஆபத்து ஏற்பட்டது என்றும் முஹம்மது ஹைதிர் கூறினார்.

“நோய்த்தொற்று எங்கிருந்து எப்படி வந்தது அல்லது நெருங்கிய தொடர்பு எங்குள்ளது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை,” என்றும்
கோவிட் -19 க்கு எனது சகோதரர்களும் பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர், இருப்பினும் கடுமையான அறிகுறிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை, இப்போது தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இறந்த தம்பதியினருக்கு முஹம்மது ஹைதிர் மற்றும் அவரது நான்கு உடன்பிறப்புகளான முஹம்மது ஹேரி(20), நூர்ஹைரிகா(18), முஹம்மது ஹைக்கீல்(13), மற்றும் முஹம்மது கீர்சமணி (7) என்பவர்கள் உள்ளார்கள் என்பதும் இப்போது போர்ட்டிக்சன், சுங்கலாவில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பத்தில் நடந்த இதயத்தை உடைக்கும் இந்தக் கதையை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு, அனைவரும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு எப்போதும் கட்டுப்பட வேண்டும் என்றும், அன்புக்குரியவர்களின் உயிரை பறிக்கும் வைரஸ் பரவுவதை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் முஹம்மது ஹைதிர் கேட்டுக்கொண்டார்.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here