7 மாத கர்ப்பிணியான 25 வயது பெண் கொலை?

பெக்கான் பாரு: வீட்டிலிருந்து  துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டாரிடர் இடம் எழுந்த புகாரை தொடர்ந்து கம்பார், கம்போங் காரிய இண்டா வீடமைப்புப் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் அவரது வீட்டின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண் சித்தி அமிடா 25 என்று அறியப்படுகிறது. தாப்புங் காவல்துறைத் தலைவர் சுமர்னோ, தனது துறை இன்னும் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், இது ஒரு கொலை வழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

குழி தோண்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் வாரிசுகள் உட்பட பல சாட்சிகளை நாங்கள் அழைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட பெண்ணின் கணவர் தனது வீட்டில் கழிவுநீர் குழி தோண்டுவதற்கு ஒரு நபரின் உதவியைக் கேட்டுள்ளார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் மே 21 முதல் அந்த பெண்ணை சந்திக்கவில்லை என்று அவர்களிடம் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.

போலீசார் சாக்கடை ஓட்டை தோண்டியெடுத்து ஒரு பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார். கொலையுண்ட சித்தி அமிடாவிற்கு  இது இரண்டாவது திருமணம் என்றும் முன்னாள் கணவரும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here