எஸ்.பி.எம்.தேர்வில் 9,411 மாணவர்கள் straight A எடுத்துள்ளனர்

பெட்டாலிங் ஜெயா: கடந்த ஆண்டு சிஜில் பெலாஜாரான் மலேசியா (எஸ்.பி.எம்) தேர்வில் மொத்தம் 9,411 மாணவர்கள அனைத்து பாடங்களிலும்  முழு மதிப்பெண்கள் (straight As)  பெற்றனர். இது 2019இல் எஸ்பி.எம். தேர்வில் 8,876 மாணவர்கள் straight As எடுத்திருந்தனர்.

2020 எஸ்பிஎம் முடிவுகள் குறித்த தனது அறிக்கையில், கல்வி அமைச்சகம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அல்லது சிஎஸ் 77,038 லிருந்து 77,731 ஆக சற்று முன்னேறியுள்ளதாகக் கூறியுள்ளது. மொத்தம் 144,447 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர், இது முந்தைய ஆண்டின் 147,738 உடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.

நாடு முழுவதும் உள்ள 3,310 தேர்வு மையங்களில் மொத்தம் 83 பாடங்களை உள்ளடக்கிய 401,105 பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்வுக்கு அமர்ந்தனர்.இன்று காலை 10 மணி முதல் மாணவர்கள் ஆன்லைனில் தங்கள் முடிவுகளைப் பெற முடிந்தது, முதல் முறையாக இந்த பெரிய தேர்வின் முடிவுகள் நேரடியாக  வழங்கப்படவில்லை.

2020 மாணவர்களுக்கான தேசிய சராசரி தரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறந்ததாக இருந்தது. 2016 ஆம் ஆண்டில் 5.05 இலிருந்து இந்த ஆண்டு 4.8 ஆகக் குறைந்து வரும் போக்கு, குறைந்த மதிப்பெண்களுடன் சிறந்த செயல்திறனைக் குறிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here