அசந்து தூங்கும் ஆசிய யானைகளின் கூட்டம்.

சீனா: புகழ் பெற்ற ஆசிய யானைகளின் கூட்டம் ஒரு காட்டில் அசந்து தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவின் யுனான் வனப்பகுதியில் வசித்து வந்த 15 யானைகளை கொண்ட யானைக்கூட்டம் திடீரென தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி சுமார் 15 மாதங்களாக குன்மிங் வனப்பகுதியை நோக்கி தமது பயணத்தை மேற்கொண்டுள்ளன. இதுவரை சுமார் 500 கி.மீ தூரத்தை கடந்து வந்து வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

3 கன்றுகளுடன் பயணிக்கும் இந்த யானைக் கூட்டம் மனிதர்கள் வசிக்கும் இடங்களை கடந்து சொல்லும்போது, வீட்டின் கேட்டுகளை தட்டி பார்ப்பது, கடைகளில் இருக்கும் உணவுகளை, வயல்வெளியில் இருக்கும் தானியங்களை ருசி பார்பபது என பல்வேறு சேட்டைகளை செய்து வருகிறது.

ஆனால் இது வரையிலும் மனிதர்களை தாக்குவது, வீடுகளை தாக்குவது என கொடூரமாக நடந்து கொண்டதில்லை.

தொடர்ந்து இந்த யானை குடும்பம் பயணத்தை தொடர்ந்து வருகிறது. யானைக் கூட்டத்தின் நகர்வுகளை ட்ரோன் மூலம் அதனை கண்காணித்து வருகின்றனர். இந்த பணியில் 14 ட்ரோகளையும் 500 வனவளத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களை உள்நாட்டு அரசு நியமித்துள்ளது.

மேலிலும் யானைகள் ஊருக்கு வந்தாலும் அவற்றை துன்புறுத்த கூடாது என்று மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யானைகள் எதற்காக தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறியது என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here