ஈப்போவில் ஒருவரை கொலை செய்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ : பாசீர் புத்தேயின் சுங்கை கிந்தா ஆற்றில் மே 26 அன்று இறந்த நிலையில் மிதந்து வந்த சடலம் சம்மந்தமான விசாரணை தற்போது கொலை என்று உறுதியாகி, ஐந்து பேர் மீது இன்று (ஜூன் 11) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர். ஜெயந்திரன், சைமன், பஹுறுடின் ஹமர்ஸ்லா, செல்வமணி மற்றும் V.திருகணேஸ் என்ற ஐவர் மீது இக்குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்ந்து இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது இச் சட்டம் கட்டாய மரண தண்டனையை விதிக்கிறது. மே 23 அன்று காலை 7.30 முதல் மாலை 5.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்திச் சென்று பின்னர் ஒரு பாழடைந்த கட்டடத்தில் வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இவர்கள் கொலை செய்வதற்காக பிரெஷ்னாவை கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 364 இன் கீழ் ஒரு குற்றமாகும், அதே குறியீட்டின் பிரிவு 34 உடன் சேர்ந்து, இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

– பெர்னாமா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here