கோலாலம்பூர்:
அதிகமான தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படுவதால் ஏராளமானோர் தடுப்பூசிகளைப் பெற்று வருவதாக அரசு கூறுகிறது.
ஜூன் 11 வரை மக்கள்தொகையில் 13 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண் டனர். நாடு மெல்ல மெல்ல கொள்ளைநோயின் பிடியிலிருந்து விடுபட்டு விடும் என்று பிரதமர் முகைதீன் யாசின் நேற்று கூறினார்.
கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூரும் புத்ராஜெயாவும் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமூகத்தை உருவாக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் கவனம் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருப்பதால் நோய்த்தடுபுக்கான சாத்தியம் நெருங்கி வருவதாக அவர் கூறினார் .
எனினும் மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்றார் அவர்.