குடும்பச் சண்டையைத் தடுக்கச் சென்ற ஹரிந்திரரூபன் கொலை!!

கவின்மலர், ஜாவி (ஜூன் 15): குடும்பச் சண்டையைத் தடுக்கச் சென்ற தென் செபெராங் பிறை டேசா ஜாவி அடுக்ககத்தைச் சேர்ந்த ஹரிந்திரரூபன் த/ பெ அழகமுத்து (வயது 35) கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இங்கு தாமான் டேசா ஜாவி புளோக்-சி என்னுமிடத்திலுள்ள வீடொன்றில் நிகழ்ந்ததாக தென் செபெராங் பிறை காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் லீ சொங் செங் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தங்களுடன் தொடர்புகொண்டு அக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் தகவல் தந்ததை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் விரைந்தது என்று லீ தெரிவித்தார்.

சூப்பிரிண்டன்டன்ட் லீ சொங் செங்

தங்களின் தொடக்க  விசாரணையில் செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் தன் மனைவியுடன் சண்டையிட்டது மட்டுமன்றி, அவரைத்  தாக்கியதாகவும் அதனைத் தடுக்க முற்பட்ட ஹரிந்திரரூபன் என்ற லோரி ஓட்டுநர் மட்டுமன்றி சம்பவம் நிகழ்ந்த வீட்டின் அறை ஒன்றில் தங்கியிருந்த உமாதேவி த/பெ சுப்பிரமணியம் (வயது 50) என்பரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது  ஹிரிந்திரரூபனை ஏறத்தாழ ஓரடி நீளமுள்ள கத்தியைக் கொண்டு சந்தேக நபர் முதுகில் குத்தியதாகத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here